சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கிய ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து நிலையில் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதததையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி பாரத ஸ்டேட் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதுவரை பாரத ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச வட்டி கடனாக 7.85% ஆக இருந்த நிலையில் தற்போது அது 0.1 சதவீதம் அதிகரித்து 7.95% என அதிகரித்துள்ளது. இதனால் தனிநபர், இருசக்கர, நான்கு சக்கர, வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு வட்டிவிகிதம் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 15 முதல் இந்த புதிய வட்டி விகிதம் அமலுக்கு வரும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.