கல்யாணம் நடக்காது ஆனா அது மட்டும் நடக்கும்... பாஜகவை விளாசிய சோரன்!!

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (12:45 IST)
பாஜக தலைவர்கள் திருமணம் செய்துக்கொள்ளாமல் காவி அணிந்து பெண்களை கற்பழிக்கிறார்கள் என ஹேமந்த் சோரன் விளாசியுள்ளார். 
 
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில் பெண்களின் பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக பாஜகவுக்கு எதிராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் சமீபத்தில் பேசினார். 
 
அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் பெண்கள் பலர் தீக்குளிக்கப்படுகிறார்கள். ஆளும் கட்சியான பாஜக தலைவர்கள் பெரும்பாலும் திருமணம் செய்து கொள்வதில்லை. ஆனால், அவர்கள் காவி ஆடைகளை அணிந்துகொண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் அத்தகையவர்களுக்கு நாம் வாக்களிக்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்