’அவரைப் போல்’ மாநிலத்திற்கு ஒரு தலைவர் இருந்தால்...நாடு முன்னேறும் - சீமான்

புதன், 18 டிசம்பர் 2019 (15:49 IST)
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி  போல் மாநிலத்திற்கு ஒரு தலைவர் இருந்திருந்தால் நாடு முன்னேறி இருக்கும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் கூறியுள்ளார்.
இந்தியாவில் பாஜக தலைமையில் மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம்  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம் ,தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில்  மாணவர்கள், எதிர்க்கட்சி  தலைவர்கள்  உள்ளிட்ட பலரும்  போராடி வருகின்றனர்.
 
இப்போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,  மத்திய அரசு அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
 
இந்நிலையில், இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு  இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரும் 23 ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இன்று, திமுக  தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது :
’மமதா பானர்ஜி போல் ஒவ்வொரு மாநிலத்திலும் தலைவர் இருந்திருந்தால், நாடு முன்னேறி இருக்கும். இங்கு மதம் அரசை ஆளுகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான்  பிரித்ததற்குக் காரணம் மதம் தான்’ என தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்