வெயிட் பண்ணுங்க ஜி! பாஜகவோட பவர பாப்பீங்க: பொன்னார் பெருமிதம்!

புதன், 18 டிசம்பர் 2019 (13:50 IST)
தமிழகத்தில் பாஜக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 
 
மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தை கண்டித்து திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அனைத்து கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பாஜக வெகு வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. திமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து பலர் பாஜகவில் வந்து இணைந்துள்ளனர். 
 
இவர்களின் வருகையால் பாஜக தமிழகத்தில் வலிமையான கட்சியாக உருவெடுத்து வருகிரது. உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பாஜகவில் இணைய உள்ளனர். அதற்காக காத்திருங்கள். 
 
தமிழகத்தின் அழிவு சக்தி திமுக. மாணவர்கள் அவர்களை நம்பி போராட்டம் நடத்தாமல் எங்களுடன் வாருங்கள். திமுகவின் பகல்வேஷத்தை கண்டித்து பாஜக சார்பில் 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் என அழைப்பும் விடுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்