ஃப்யூஸ் போகும் அதிகாரம்... பறிபோகும் அமித்ஷா பதவி!

புதன், 18 டிசம்பர் 2019 (17:43 IST)
பிப்ரவரி மாத இறுதியில், அமித்ஷாவிடம் இருக்கும் பாஜக தேசிய தலைவர் பதிவில் புதிய ஒருவரை தேர்ந்தெடுத்து நியமிக்க உள்ளனராம். 
 
மத்தியில் ஆளும் தேதிய கட்சியான பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற விதி பின்பற்றப்படுவதால், மத்திய உள்துறை அமைச்சராக பதவி வகித்துவரும் அமித்ஷா, கட்சித் தலைவராக தொடர்ந்து பதவி வகிக்க முடியாது. 
 
ஆனால், ஆர் கடந்த சில மாதங்களாக இரு பதவிகளில் இருந்து வருகிறார். எனவே, பாஜகவுக்கு புதிய தலைவரை நியமிக்க உள்ளனராம். அதன் படி  வருகிற பிப்ரவரி மாத இறுதியில், கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும், புதிதாக மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்ட மாநிலங்களை தவிர்த்து மீதமுள்ள மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் பணி ஜனவரி 15 ஆம் தேதி துவங்கவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்