அன்புமணி மீது டாக்டர் ராமதாஸ் டிஜிபியிடம் மனு.. முற்றும் அப்பா - மகன் மோதல்..!

Siva

வியாழன், 24 ஜூலை 2025 (09:04 IST)
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தனது மகன் மற்றும் பா.ம.க.வின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜி வாலிடம் புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க.வின் பெயர் மற்றும் கொடியை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்பதே ராமதாஸின் முக்கிய கோரிக்கையாகும்.
 
கடந்த சில நாட்களாகவே ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் பெரும் விவாத பொருளாக இருந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், "தமிழக மக்கள் உரிமைப் பழைய மீட்புப் பயணம்" என்ற பெயரில் அன்புமணி நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்.
 
அன்புமணி மேற்கொள்ள இருக்கும் இந்த சுற்றுப்பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பா.ம.க.வின் கொடி மற்றும் பெயரை அன்புமணி ராமதாஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, டாக்டர் ராமதாஸ் தரப்பில் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 
அந்த மனுவில், தனது அனுமதி இல்லாமல் கட்சியின் பெயர், கொடி, நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பிரச்சாரங்களை அன்புமணி செய்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இந்த மனு மீது தமிழக காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தந்தை மகனுக்கு இடையிலான இந்த மோதல், பா.ம.க.வின் அரசியல் எதிர்காலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவராலும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்