மகாராஷ்டிரா தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (09:36 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கே என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 13 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
ஏற்கனவே கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளும், ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது தீ விபத்தால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் மகாராஷ்டிரா தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதி உதவி என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்