நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட ரோவரின் செயல்பாடுகள் சீராக உள்ளது என இஸ்ரோ இன்று அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்- 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பிய நிலையில், விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் நிலவில் தரையிறங்கியது.
நிலவின் தென்துருவப் பகுதியில் முதன் முதலாக இஸ்ரோவில் சந்திரயான் 3 விண்கலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சந்திரயான் 3 விண்கலத்துடன் சேர்த்து வைக்கப்பட்டிருந்த லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிலையில், அதன் வயிற்றுப் பகுதியில் இருந்து ரோவரும் தனியே பிரிந்து வெளியே வந்தது.
விக்ரம் லேண்டரிலிருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் சுமார் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகவும், திட்டமிட்டது மாதிரி ரோவரின் செயல்பாடு சரிபார்க்கப்பட்டதாகவும், ரோவரின் உந்துவிசை, லேண்டரின் தொகுதிகள் இயல்பாக செயல்பட்டு வருவதாக ஏற்கனவே இஸ்ரோ அறிவித்தது.
இந்த நிலையில், ரோவரின் செயல்பாடுகள் சீராக உள்ளது என இஸ்ரோ இன்று அறிவித்துள்ளது.
அதில், லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து கருவிகளின் செயல்பாடுகளும் சீராக உள்ளது எனவும், பிரக் ஞான் ரோவன் மூலம் சந்திரனில் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தற்போது தெரிவித்துள்ளது. மேலும் சந்திரயான் 3 திட்டத்தின் குறிக்கோள் நிறைவேறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
The landing site of #Chandrayaan3 and the crash site of Chandrayaan-2 have been named "Shiv Shakti Point" and "Tiranga Point" respectively.