விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த சந்திரயான் 2 ஆர்பிட்டர்

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (12:40 IST)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்- 3 விண்கலத்தை  நிலவுக்கு அனுப்பிய நிலையில்,  விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத்  நிலவில் தரையிறங்கியது.

சந்திரன் பற்றிய ஆராய்ச்சியில் இதற்கு முன்னதாக உலக வல்லரசு நாடுகளாக அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து, இந்தியா  நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்துள்ளது. இதற்கு  உலக நாடுகள் இந்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் கூறி வருகின்றன.

நிலவின் தென்துருவப் பகுதியில் முதன் முதலாக இஸ்ரோவில் சந்திரயான் 3 விண்கலன் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்  நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 லேண்டரை புகைப்படம் எடுத்துள்ளது சந்திரயான் 2 ஆர்பிட்டர்.

சந்திரயான் 3 விண்கலத்துடன் சேர்த்து வைக்கப்பட்டிருந்த லேண்டர்  நேற்று முன்தினம் நிலவில் தரையிறங்கிய நிலையில், அதன் வயிற்றுப் பகுதியில் இருந்து ரோவரும் தனியே பிரிந்து வெளியே வந்தது.

இதிலுள்ள அனைத்துக் கருவிகளும் இயங்கி செயல்பாட்டிற்கு வந்துவிட்டதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாகக் கூறியுள்ளது.     நிலவின் தரைப்பகுதியில் ரோவரின் இயக்கம்  தொடங்கிய நிலையில், அதிலிருந்த இல்சா, ரம்பா, காஸ்டே உள்ளிட்ட கருவிகளும் நேற்று  முதல் செயல்பாட்டிற்கு வந்தன.

எனவே, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரனில் தரையிறங்கிய சந்திரயான் 3 லேண்டரை அழகாகப் படம்பிடித்துள்ளது சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இணைக்கப்பட்டிருந்த கேமரா. இதை இஸ்ரோ வெளியிட்டுள்ள நிலையில் வைரலாகி வருகிறது.

The news about Pragyan driving on the Moon is untrue.

Pragyan has been deployed and is standing on the Lunar surface but it needs to charge its batteries first.⚡️#ISRO will try to drive Pragyan sometime today. #Chandrayaan3 https://t.co/i6FdRcyLNn

— ISRO Spaceflight (@ISROSpaceflight) August 24, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்