இந்தியாவின் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 என்ற விண்கலம், நிலவின் தென்துருவத்தை அடைந்தது என்பதும் அதிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தற்போது நிலவில் உலவி வருகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்த சாதனையை நிகழ்த்திய நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது..
இந்த நிலையில், விண்வெளிக்கு பெண் ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சுகன்யான் திட்டத்தின் 2 வது சோதனையில் வயோமித்ரா என்ற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக மத்திய அறிவியல்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.