விக்ரம் லேண்டரிலிருந்து பிரிந்த பிரக்யான் ரோவரின் புதிய அப்டேட்

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (20:35 IST)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்- 3 விண்கலத்தை  நிலவுக்கு அனுப்பிய நிலையில்,  விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத்  நிலவில் தரையிறங்கியது.

சந்திரன் பற்றிய ஆராய்ச்சியில் இதற்கு முன்னதாக உலக வல்லரசு நாடுகளாக அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து, இந்தியா  நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்துள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதியில் முதன் முதலாக இஸ்ரோவில் சந்திரயான் 3 விண்கலன் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்  நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 லேண்டரை புகைப்படம் எடுத்துள்ளது சந்திரயான் 2 ஆர்பிட்டர்.

சந்திரயான் 3 விண்கலத்துடன் சேர்த்து வைக்கப்பட்டிருந்த லேண்டர்  நேற்று முன்தினம்  நிலவில் தரையிறங்கிய நிலையில், அதன் வயிற்றுப் பகுதியில் இருந்து ரோவரும் தனியே பிரிந்து வெளியே வந்தது.

எனவே, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரனில் தரையிறங்கிய சந்திரயான் 3 லேண்டரை அழகாகப் படம்பிடித்துள்ளது சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இணைக்கப்பட்டிருந்த கேமரா. இதை இஸ்ரோ வெளியிட்டது.

இந்த நிலையில் இஸ்ரோ ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘’விக்ரம் லேண்டரிலிருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் சுமார் 8 மீட்டர் தூரத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகவும், திட்டமிட்டது மாதிரி ரோவரின் செயல்பாடு சரிபார்க்கப்பட்டதாகவும், ரோவரின் உந்துவிசை, லேண்டரின்  தொகுதிகள் இயல்பாக செயல்பட்டு வருவதாக’’ இஸ்ரோ  அறிவித்துள்ளது.

Chandrayaan-3 rover seen coming down the lander ramp onto the lunar surface

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்