பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva

புதன், 27 நவம்பர் 2024 (09:29 IST)
பங்குச்சந்தை கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை மிகப்பெரிய அளவில் உயர்ந்த நிலையில், நேற்றைய தினம் பங்குச்சந்தை ஏற்றத்தில் ஆரம்பித்தாலும், முடிவின்போது சுமார் 200 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தை எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில், பெரிய அளவில் ஏற்றத்தோடும் இறக்கத்தோடும் இல்லாமல், நேற்றைய நிலையில் கிட்டத்தட்ட வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வெறும் 10 புள்ளிகள் மட்டும் குறைந்து 79,990 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், நிஃப்டி வெறும் 6 புள்ளிகள் மட்டும் குறைந்து 24,180 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மிகக் குறைந்த அளவில் தான்  குறைந்துள்ளது   காரணமாக, மீண்டும் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் பைனான்ஸ், எச்சிஎல் டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதே நேரத்தில், ஐடிசி, இண்டஸ் இண்ட் வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், பாரதி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்