ஓபிசி இடஒதுக்கீட்டில் 4 வகை உள் ஒதுக்கீடு! – மத்திய அரசின் ஆணையம் பரிந்துரை?

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:19 IST)
நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் ஓபிசி இட ஒதுக்கீட்டில் 4 வகை உள்ஒதுக்கீட்டை ஏற்படுத்த ரோகிணி ஆணையம் சிபாரிசு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் ஓபிசி, பிசி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஓபிசி பிரிவின் கீழ் சுமார் 2,633 சமூகங்களுக்கு 27% இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசினால் ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ள ரோகிணி ஆணையம் ஓபிசி இட ஒதுக்கீட்டில் 4 வகை உள் ஒதுக்கீடுகளை அமல்படுத்த பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்