உத்தரகாண்ட்டில் நீடிக்கும் மீட்பு பணி - 150-க்கும் மேற்பட்டோர் மாயம்!

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (08:12 IST)
உத்தரகாண்ட்டில் 11 வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணிகளில் 56 உடல்கள் மீட்பு என தகவல் வெளியாகியுள்ளது. 

 
உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் பனிச்சரிவு ஏற்பட்டதால் உருவான வெள்ளத்தில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டது. அங்கிருந்த நீன்மின் நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. சுரங்க பாதையில் பணியில் இருந்த ஊழியர்கள், மக்கள் என சுமார் 35 பேர் அதற்குள் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. 
 
இந்த சம்பவம் உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுரங்கத்தில் உள்ளவர்களை மீட்க ஒரு வாரத்திற்கு மேலாக இந்தோ- திபெத் எல்லை படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் போராடி வருகிறார்கள். 
 
இந்நிலையில் சுரங்கத்தில் இருந்து இதுவரை 56 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 150-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. காணாமல் போன 150-க்கும் மேற்பட்டோரை மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்