ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா; அனைத்து முதல்வர்களுக்கும் அழைப்பு!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (14:30 IST)
ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க அனைத்து முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்க உள்ளதாக அறக்கட்டளை தலைவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்டு 5ம் தேதி அடிக்கல் நடும் விழா நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைக்க இருக்கிறார். இந்த விழாவில் பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பகவத் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்க இருப்பதாக ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே இந்த விழாவில் பங்கேற்பார் என கூறப்பட்டுள்ள நிலையில் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்விழாவில் பங்கேற்பது மதசார்பின்மைக்கு எதிரானது என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

எனினும் கொரோனா பாதிப்புகள் உத்தர பிரதேசத்தில் அதிகரித்து வரும் நிலையில் ஒரு சில மாநில முதல்வர்களே இதில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்