பிரதமருக்கு நிதி கொடுத்தது யார்னு தெரியும்? – ராகுல்காந்தியின் ட்வீட்டுக்கு வலுக்கு எதிர்ப்புகள்!

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2020 (10:18 IST)
பிரதமரின்  பி.எம் கேர் கணக்கில் பணம் அளித்த சீன நிறுவனங்கள் பட்டியலை வெளியிட கோரி ராகுல் காந்தி பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களிடமிருந்து கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் பெயரால் நிதி சேகரிக்கப்பட்டது. பி.எம்,.கேர்ஸ் என்ற திட்டத்தின் மூலம் நிதி சேகரிக்கப்பட்ட நிலையில் இந்த அமைப்பு தனியார் அமைப்பு என்றும், சீன நிறுவனங்கள் பிஎம் கேர்ஸுக்கு நிதி அளித்துள்ளதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. சீனாவுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் காங்கிரஸின் இந்த குற்றசாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

பி.எம்.கேருக்கு நிதி வழங்கிய சீன நிறுவனங்களின் பட்டியலை வெளியிடுமாறு காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கேட்டபோது அதற்கு பாஜகவினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “பி.எம் கேருக்கு நிதி வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட மோடி ஏன் பயப்படுகிறார்? சீன நிறுவனங்களான ஹூவாய், ஒன் ப்ளஸ், டிக்டாக், சியோமி போன்ற சீன நிறுவனங்கள்தான் நிதியளித்துள்ளன என அனைவருக்கும் தெரியும்” என கூறியுள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்திலும் காங்கிரஸ் தொடர்ந்து சந்தர்ப்ப வாத அரசியல் செய்வதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்