இணைய வசதி இல்லை; வறுமை தொல்லை! படிப்பை நிறுத்தும் சிறார்கள்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஞாயிறு, 12 ஜூலை 2020 (08:31 IST)
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வறுமை உள்ளிட்ட பல காரணங்களால் பல குழந்தைகள் படிப்பை நிறுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள சர்வே முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சில மாநிலங்களில் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைகள் உரிமைகள் குறித்து இயங்கும் தன்னார்வல அமைப்பான ”சேவ் தி சில்ட்ரன்” நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் ஊரடங்கால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அபாயம் எழுந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல பகுதிகளில் மக்கள் மதிய உணவு உள்ளிட்ட சில உதவிகளின் பேரில் சிறுவர்களை பள்ளிக்கு அனுப்பி வந்த நிலையில் தற்போது அவர்கள் வறுமையில் இருப்பதால பல இடங்களில் மாணவர்கள் வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்ல தொடங்கி விட்டதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் படிக்க பல மாணவர்களிடம் அவச்தி இல்லாததால் படிப்பை அவர்களால் படிப்பை தொடர முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் நிலையிலும் தொடக்க பள்ளி அளவிலேயே உள்ள மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளை சரிவர புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் அவர்களும் இந்த வகுப்புகளை அதிக அளவில் படிப்பதில்லை என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்