வினாத்தாள் கசிந்த விவகாரம்..! நீட் தேர்வு ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு..!

Senthil Velan
திங்கள், 3 ஜூன் 2024 (14:26 IST)
மே 5 -ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவு தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்வை நடத்துமாறு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த ஆண்டு மே 5 ஆம் தேதி நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்த ஓரிரு நாட்களிலேயே நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகின. பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து முறைக்கேடு நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த முறைகேட்டில் பலர் கைது செய்யப்பட்டனர். 
 
இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மே 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு கோடைக்கால விடுமுறைக்கு பிறகு ஜூலை மாதம் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ALSO READ: தியான அனுபவங்களை பகிர்ந்த பிரதமர் மோடி..! பாரதத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் என அழைப்பு..!!
 
இந்த நிலையில் நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்