நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Mahendran

வெள்ளி, 17 மே 2024 (17:38 IST)
சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இதனால் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை என உச்ச நீதிமன்றம் சற்று முன் முக்கிய உத்தரவு ஒன்றை பரப்பி உள்ளது.

நீட் தேர்வு மே ஐந்தாம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினார்கள். இந்த நிலையில் பீகார் ராஜஸ்தான் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்த விவகாரத்தால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் வினாத்தாள் கசிந்த வழக்கு கோடை விடுமுறைக்கு பிறகு ஜூலை மாதம் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்