கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா.. 500 ரூ அபராதம் – கோவில் நிர்வாகம் அதிரடி

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (16:36 IST)
வெத்தலை, புகையிலை பொருட்களை போட்டுவிட்டு கோவிலுக்குள் நுழைந்தால் 500 ரூபாய் அபராதம் என அறிவித்துள்ளது புகழ்பெற்ற புரி ஜெகன்நாத் ஆலய நிர்வாகம்.

இந்தியாவில் உள்ள பிரபலமான கோவில்களில் முக்கியமானது ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்நாத் ஆலயம். வருடத்திற்கு ஒருமுறை இங்கு நடைபெறும் தேரோட்டம் இந்திய அளவில் பிரசித்தம். 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலை காண சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அதிகம் வருகை தருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் வெற்றிலை பாக்கு, புகையிலை பொருட்களை வாயில் போட்டு கொண்டு வருகின்றனர். அதை கோவிலின் பல பகுதிகளிலும் துப்பிவிட்டு சென்றுவிடுகின்றனர். எச்சில் துப்ப வேண்டாம் என பலகை வைத்து பயனில்லை. அதனால் வெற்றிலை, புகையிலை பொருட்கள் போட்டு வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அதையும் மீறி கோவிலுக்குள்  வெற்றிலை, புகையிலை பொருட்களை போட்டுக்கொண்டு வந்தால் 500 ரூபாய் அபராதம் என அறிவித்துள்ளது கோவில் நிர்வாகம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்