கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு 28 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு… மறு உத்தரவு அனுப்பிய முதல்வர்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (11:52 IST)
உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்க்ளுக்கு சம்பளத்துடன் கூடிய 28 நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் தொற்றுக்கு ஆளாகும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 28 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதை பெரிதாக எந்த நிறுவனங்களும் கண்டுகொள்ளவில்லை என்பதால் இப்போது அதே உத்தரவை மறுபடியும் அனுப்பியுள்ள உபி மாநில அரசு. இதை நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்