முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

Siva

ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (16:52 IST)
ஆட்சி இருக்கிறது என்ற ஆணவ செருக்கில் நீங்கள் பேசும் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடுகிறது.

இதுமட்டுமன்றி ஆசிரியர்கள், மருத்துவர்கள், நெசவாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் தெருவில் இறங்கி போராடும் சூழலே உள்ளது.

"குற்றச்சாட்டு வைப்பதே எனக்கு வேலையாக போய்விட்டது" என்று கூறும் திரு.
@mkstalin
 அவர்களே- விடியா திமுக ஆட்சியின் அவல நிலையை சுட்டிக்காட்ட வேண்டியது எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் என்னுடைய கடமை.
அதற்கு முறையான நடவடிக்கை எடுத்து செயல்படுத்துவது அரசின் கடமை.

அதை செய்யாத, தனக்கு எந்த திறமையும் இல்லாத ஒரு முதலமைச்சரிடம் இப்படிப்பட்ட மடைமாற்றும் பதிலைத்தான் எதிர்பார்க்க முடியும்.

திமுகவிடம் நாகரிகத்தையோ, மக்கள் மீதான அக்கறையோ எதிர்பார்க்க முடியாது தான் என்றாலும், திரு. ஸ்டாலினின் சமீபத்திய தரக்குறைவான பேச்சுகளே அதற்கான மிகப்பெரிய சான்றாக அமைகிறது .

நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் முடிந்தால் மக்கள் பணி செய்யுங்கள்; இல்லையேல், நிர்வாகத் திறனில்லை என்று ஒப்புக்கொள்ளுங்கள்.

ஆட்சி இருக்கிறது என்ற ஆணவ செருக்கில் நீங்கள் பேசும் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்!


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்