இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார் ஆஸியின் பேட் கம்மின்ஸ். நடப்பு சீசனில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் அவரும் ஒருவர். இந்நிலையில் இப்பொது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் பிரதமர் நிவாரண நிதிக்கு 50000 டாலர் நன்கொடையாக அளித்துள்ளார். இதுபோல மற்ற வீரர்களும் நிதியளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.