லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

Siva

ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (16:46 IST)
அரசியல் குறித்து மூன்று மாத மேற்படிப்பு படிக்க லண்டன் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னைக்கு திரும்பிய நிலையில், முதல் பேட்டியில் அவர் விஜய் குறித்து கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று மாத கால லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை திரும்பினார். அவரை பாஜக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், " அரசியல் தொடர்பாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முன்னாள் பிரதமர்கள் நடத்திய பாடத்தை படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது," என்று தெரிவித்தார்.

மூன்று மாதங்களில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நடந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார். விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்கிறோம் என்றாலும், "விஜய் திராவிட சித்தாந்தத்தையே பேசி வருகிறார். ஒன்றும் புதியதாக அவர் கூறவில்லை. அவரின் அரசியல் வருகை மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், அவரது தீவிர அரசியல் செயல்பாடுகள் ஆரம்பித்த பிறகே அவரைப் பற்றி விமர்சனம் செய்வோம்," என்று கூறினார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகளை பொறுத்து பாஜக விமர்சனம் செய்யும் என்றும், பாஜகவைப் பொருத்தவரை புதிய கட்சிகளுக்கு பயப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தல் முக்கிய சரித்திர தேர்தலாக இருக்கப் போகிறது," என்றும் அவர் கூறினார்.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்