புதுச்சேரி கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு கொரோனா தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது புதிய அரசுத் துறை செயலர் அசோக்குமார் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி மே 3 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.