ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. நடிகையும், அக்கட்சியின் எம்.எல்.ஏவுமான ரோஜா அரசு ஆம்புலன்ஸை ஓட்டி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா, ஆந்திர அரசியலிஉல் குதித்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற சடமன்ரத் தேர்தலில் மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டார். அவரது வளர்ச்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அவர் ஆந்திர மாநிலம் நகரி என்ற தொகுதியில் எம்.எல்.ஏவாக உள்ளார். முதல்வர் ஜெகன் மோஜன் ரெட்டி அனைத்து மக்களுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியுள்ளார்.
எனவே நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்காக ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடைபெற்றது. இதில் நடிகை ரோஜா கலந்துகொண்டதுடன் திடீரென ஆம்புலன்ஸை ஓட்டினார்.
இதைப் பார்த்த தெலுங்கு தேசம் கட்சியினர் ரோஜாவிடம் லைசென்ஸ் உள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.