இந்திய அணியின் கேப்டனான கோலி, தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் நம்பர் ஒன் வீரராக அனைத்து விதமான போட்டிகளிலும் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் இந்திய கிரிக்கெட் வீரராகவும் இருந்து கொண்டு சக வீரர்களின் வர்த்தக விஷயங்களை கையாளும் ஒரு நிறுவனத்துக்கும் இயக்குனராக இருப்பதாக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த சஞ்ஜீவ் குப்தா பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளார்.