வருங்காலத்தில் மக்கள் நிலவில் குடியேறும் நிலை உண்டாகலாம்! சந்திராயன் 3 குறித்து பிரதமர் மோடி

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (15:29 IST)
சந்திராயன் விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் சந்திராயன் 3 ஏவப்படுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்  விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் 
 
அதில் சந்திராயன் 1 விண்கலம் ஏவுவதற்கு முன்னர் யாரும் வாழ முடியாத தன்மை கொண்டதாக நிலவு இருக்கும் என நம்பப்பட்டு வந்தது. ஆனால் நிலவில் நீர் இருப்பதும் அதன் நிலப்பரப்பில் பனிக்கட்டிகள் இருப்பதும் கண்டறியப்பட்டன. 
 
தொடர்ச்சியாக மாற்றங்கள் நிகழக்கூடிய உயிரோட்டம் உள்ள ஒரு நிலப்பரப்பாக நிலவு தற்போது பார்க்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் மக்கள் நிலவில் குடியேறும் நிலை கூட உண்டாக்கலாம் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்