வளர்ச்சி இடைவெளியை குறைக்க வேண்டும்! – பஞ்சாயத்து தலைவர்களோடு பிரதமர் ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (12:14 IST)
கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவும் மெல்ல மெல்ல அதன் பாதிப்புகளால் உயிரிழப்பை அதிகம் சந்தித்து வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால் கொரோனா பரவல் வேகம் ஓரளவு மட்டுப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அதில் பேசிய அவர் “கொரோனா நம் அன்றாட வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நாம் தீவிரமாக இறங்க வேண்டும். கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான வளர்ச்சி இடைவெளியை குறைக்க வேண்டும். பஞ்சாயத்து பகுதிகளை ஆன்லைன் மூலமாக இணைப்பதற்கான புதிய இணையதளம் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்