WHO-வை கைவிட்ட அமெரிக்கா; ஈழுத்து பிடிக்கும் சீனா!!

வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (11:24 IST)
சீனா, உலக சுகாதார நிறுவனத்திற்கு 3 கோடி டாலர் நிதியை அளிக்க உள்ளது. 
 
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு தகவல்களை திரட்டி அதிலிருந்து மக்களை காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது உலக சுகாதார அமைப்பு. 
 
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டிய ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதனால் அந்த அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தபோவதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். 
 
ட்ரம்ப்பின் இந்த குற்றசாட்டிற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் நேரடியாகவே பதில் அளித்துள்ளார். அதில் “உலகம் சந்தித்துள்ள இந்த இக்கட்டான சூழலில் இருந்து மக்களை காப்பாற்ற நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். தயவு செய்து கொரோனா வைரஸை வைத்து அரசியல் செய்யாதீர்கள். இந்த ஆபத்தான வைரஸை தோற்கடிக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என கூறினார்.  
 
ஆனால் இதனையும் மீறி உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்படும் நிதியை முற்றிலும் நிறுத்தியுள்ளாட் ட்ரம்ப். இதனைத்தொடர்ந்து சீனா, உலக சுகாதார நிறுவனத்திற்கு 3 கோடி டாலர் நிதியை அளிக்க உள்ளது. 
 
ஆம், ஏற்கனவே வழங்கி வரும் 2 கோடி டாலர் நிதி உதவியை தவிர்த்து இந்த 3 கோடி டாலரை கூடுதலாக வழங்க உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் மீது சீன அரசும், மக்களும் வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டும் வகையில் இந்த கூடுதல் நிதி அளிக்கப்படுவதாகவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்