இண்டிகோ விமான நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முழு சம்பளம் அளிப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான லாக் டவுன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் இயங்காமல் உள்ளன. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இண்டிகோ தனது நிறுவனத்தைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் எந்தவித பிடித்தமுமில்லாமல் முழுமையான சம்பளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.
முதலில் 10 முதல் 20 % சம்பளம் பிடிக்கப்படும் என அறிவித்த நிலையில் இந்த முடிவில் இருந்து பின்வாங்கி முழு சம்பளத்தையும் அளிக்க முன்வந்துள்ளது.