டெல்லியில் நடந்த சர்வதேச ஆர்ய மகா சம்மேளனத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்தநாளையும், ஆர்ய சமாஜத்தின் 150 ஆண்டுகாலச் சேவையையும் நினைவுகூரும் வகையில், மோடி ஒரு நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
	 
	"இந்தியா முன்னேற, சமூகத்தில் உள்ள அடிமைத்தனத்தை அகற்ற வேண்டும் என்பதை சுவாமி தயானந்த சரஸ்வதி உணர்ந்திருந்தார். எனவே அவர் ஜாதி, தீண்டாமை, பாகுபாடு ஆகியவற்றை கடுமையாகக் கண்டித்தார்," என்று மோடி புகழாரம் சூட்டினார்.