எம்.எல்.ஏ ஆகாமலேயே அமைச்சரானார் முகமது அசாரூதின்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Mahendran

வெள்ளி, 31 அக்டோபர் 2025 (18:15 IST)
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அசாருதீன், தெலுங்கானா அமைச்சராக இன்று பதவியேற்று கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
கடந்த 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த முகமது ஆசாருதீன், அதன் பிறகு கட்சிக்காக தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில், தெலுங்கானா மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில் முகமது அசாருதீனுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. 
 
கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜுபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன், தோல்வி அடைந்தார். ஆனால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், அவர் வெற்றிக்கு முன்பே அமைச்சராக பதவியேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்