உத்தரப் பிரதேச நிகழ்ச்சியில் பேசிய அவர், "தாவூத் இப்ராஹிம் தீவிரவாதி அல்ல, அவருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பில்லை" என்றும், "விக்கி கோஸ்வாமி எந்த தேசவிரோத செயலிலும் ஈடுபடவில்லை" என்றும் பேசியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து மம்தா குல்கர்னி விளக்கமளித்துள்ளார். அதில், "நான் தாவூத் இப்ராஹிம் குறித்து பேசவில்லை, எனது முன்னாள் பார்ட்னர் விக்கி கோஸ்வாமி பற்றி மட்டுமே பேசினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, போதைப்பொருள் வழக்கில் விக்கி கோஸ்வாமி கைது செய்யப்பட்ட பிறகு, செய்வதறியாமல் மம்தா குல்கர்னி இந்தியா திரும்பி ஆன்மீகத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.