ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

Siva

வெள்ளி, 31 அக்டோபர் 2025 (20:12 IST)
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக, ஃபோர்டு  நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
 
கடந்த ஆண்டு அமெரிக்க பயணத்தின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஃபோர்டு அதிகாரிகளை சந்தித்துத் தமிழகத்தில் மீண்டும் செயல்பாடுகளை தொடங்க கோரிக்கை விடுத்தார்.
 
இந்த கோரிக்கையின் அடிப்படையில், ஃபோர்டு நிறுவனம் ரூ.3250 கோடி முதலீட்டில் வாகன என்ஜின் உற்பத்தி திட்டத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
2030-க்குள்
 தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தும் இலக்குடன் அரசு செயல்படும் நிலையில், இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
 
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்