மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

Mahendran

வெள்ளி, 31 அக்டோபர் 2025 (18:30 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழா நடைபெறவிருப்பதை அடுத்து, தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு சென்று வரச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
 
அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை சென்னை உட்படப் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு சொகுசு பேருந்துகள், குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் சாதாரணப் பேருந்துகள் ஆகியவை சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட இருப்பதாகத் தமிழகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
 
இந்த ஆண்டு பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு, கூடுதலாக பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் தமிழகப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்