மழைக்காலம் தொடங்கி 15 நாட்களில், மாநிலம் முழுவதும் 16,648 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 6.78 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். ஒரு தெருவில் காய்ச்சல் கண்டறியப்பட்டால், உடனடியாக முகாம் நடத்தப்படுகிறது.
	 
	இந்த ஆண்டு இதுவரை 18,725 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தாமதமாகவும், இணை நோய்களுடனுமே இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
	 
	டெங்கு பரிசோதனைக்கு இந்தியாவில் அதிகபட்சமாக, தமிழகத்தில் 4,755 ஆய்வகங்கள் செயல்படுகின்றன. மலேரியா, டைபாய்டு போன்ற பிற மழைக்கால நோய்களின் பாதிப்பும் கடந்த ஆண்டைவிடக் கணிசமாகக் குறைந்துள்ளது.