போலி வழக்கில் சிபிஐ என்னை கைது செய்ய திட்டம் - துணைமுதல்வர் சிசோடியா

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (16:17 IST)
டெல்லி துணை முதல்வர் மணீஸ் சிசோடியா சிபிஐ என்னைக் கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

டெல்லி யூனியனில் முதல்வர்  கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, சமீபத்தில், மதுபானம் உரிமை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த புகாரின் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பாஜக வேண்டுமென்றே குற்றம்சாட்டுவதாக ஆம் ஆம்மி தரப்பு கூறினர்.

இந்த  நிலையில்,  புதிய மதுபான கொள்கை மோசடி புகாரில் சிபிசை அதிகாரிகள் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று மணீஸ் சிசொடியாவுக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், சிபிஐ தன்னை கைது செய்யதிட்டமிட்டுள்ளதாக துணை முதல்வர் மணீஸ் சிசோடியா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

போலி வழக்கில் சிபிஐ என்னைக் கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்