மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்பு-பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக கழக இளைஞரணிச் செயலாளர் உதய நிதி MLA எம்.எல்.ஏ தலைமையில், மாணவரணிச் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ அவர்கள் முன்னிலையில், வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய உதய நிதி, தமிழர் உணர்வுகளை புறக்கணித்து மொழி திணிப்பு தொடர்ந்தால், மொழி-மாநில-கல்வி உரிமை காக்க தமிழ்நாட்டில் திரண்ட இளைஞர் கூட்டம் ஒன்றிய தலைநகரான டெல்லியில் திரளும் என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக முன்னாள் தேசிய செயலாளரும், பாஜக நிர்வாகியுமான ஹெச்.ராஜா தன் டுவிட்டர் பக்கத்தில், நான் 1964-65 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பார்த்தவன். ஆனால் இன்று திமுக நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் மக்கள் ஆதரவோ பங்களிப்போ இல்லாத வெறும் Road side தமாஷாவாக உள்ளதை பார்க்க முடிகிறது என்று பதிவிட்டுள்ளார்.