மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 24 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி முடிவடைகிறாதுஜூன் 1 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்படுகிறது.
இந்த வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 3 ஆம் தேதிகால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூன்) 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே நிர்மலா சீதாராமனை கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்வு செய்ய பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே திமுக சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிகையில் திமுக சார்பில் 3 பேரும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவரும் போட்டிய்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர்,துணைக்குடியரசு தலைவர்,மா நிலங்களவை உறுப்பினர்கள் அடிப்படையில் வாக்குகள் நிர்ணயம் செய்யப்படுவர் என்பது குறுப்பிடத்தக்கது.