தமிழக சிறுமிக்கு மருந்து; வரியை ரத்து செய்த மத்திய அரசு!

புதன், 14 ஜூலை 2021 (15:52 IST)
தமிழக சிறுமி மித்ராவின் சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் மருந்துஆன வரியை ரத்து செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசித்து வரும் சதீஷ் – பிரியதர்ஷினி ஆகியோரின் மகள் இரண்டு வயதான மித்ரா. சமீபத்தில் மித்ராவை உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்தபோது குழந்தைக்கு தண்டுவட சிதைவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கான தடுப்பு மருந்து ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்படுகிறது. அதை வாங்க ரூ.16 கோடி தேவைப்படும் என்ற நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக நிதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. பலர் தாராளமாக நிதி அளித்ததின் பேரில் குழந்தைக்கு மருந்து வாங்குவதற்கான பணம் கிடைத்துள்ளது. ஆனால் மருந்தை இந்தியாவிற்குள் கொண்டு வர ரூ.6 கோடி இறக்குமதி வரி உள்ளதால் மருந்தை வாங்குவதில் சிக்கல் இருந்து வந்தது.

இதுகுறித்து பலரும் மத்திய அரசுக்கு வரிசலுகை வழங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதியிருந்தார், இந்நிலையில் சிறுமி மித்ராவின் சிகிச்சைக்கான மருந்துகளுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்