மதுரை தமிழ் பெண்ணுக்கு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர்

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (21:33 IST)
ஒருபக்கம் இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சனை, இன்னொரு பக்கம் பாகிஸ்தானின் தொடர் அட்டுழீயம், மற்றொரு பக்கம் இலங்கை கொடுத்து வரும் தொல்லை என இந்தியாவை சுற்றி எதிரிகள் வட்டமிட்டு கொண்டிருக்கும் நிலையில் ஜான்சிராணி என்று அழைக்கப்படும் நிர்மலா சீதாராமன் என்ற தமிழ்ப்பெண் இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சாகி உள்ளார்.



 
 
பாதுகாப்புத்துறையை இந்திராகாந்திக்கு அடுத்து பெறும் பெண்மணி என்ற புகழை பெற்றுள்ள நிர்மலா சீதாராமன், ஆந்திராவை சேர்ந்தவரை திருமணம் செய்த போதிலும் அவர் தமிழகத்தை சேர்ந்த, இன்னும் சொல்லப்போனால் மதுரையை சேர்ந்த, நன்றாக தமிழ் பேசும் பெண். 
 
நீட் விஷயத்தில் அவர் தமிழர்களை ஏமாற்றினாலும் அவருக்கும் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு அவர்  கட்டுப்பட வேண்டியதிருக்கலாம். இந்த நிலையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அவர் துணிச்சலான முடிவுகளை எடுப்பார் என நம்புவோம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்