இந்நிலையில் கோவா மாநில காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் சந்திரகாந்த் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் அந்த மனுவில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற, காங்கிரசை தான் முதலில் ஆட்சியமைக்க கவர்னர் அழைத்திருக்க வேண்டும் என்றும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது சட்டவிரோதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக்கொண்டுள்ளது. நாளைய விசாரணையில் மனோகர் பாரிக்கர் அரசு பதவியேற்க தடை விதிக்குமா? என்ற கலக்கத்தில் உள்ளது பாஜக மேலிடம்