இந்த எட்டு அமைச்சர்களில் ஒருவர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஆந்திராவை சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளார். தமிழில் நன்கு பேசும் புலமை கொண்ட இவரை தமிழக பாஜக தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.