இரவு நேர ஊரடங்கு...ரயில்வே சேவையில் மாற்றம் !

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (17:38 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலத்தில் இந்த் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை பயணிகள் சேவை இருக்காது எனத் தகவல் வெளியாகிறது. மேலும், ரயில்வே ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு மட்டும் சில சிறப்பு ரயில்களை இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்