சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை: இரவு நேர ஊரடங்கா?

ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (07:02 IST)
தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்
 
இதனை அடுத்து தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகியவை வைக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்