உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சிவன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் சிலை உடைக்கபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் மோடி பிரதமராக வேண்டி ஒரு சிவன் கோயிலில் மோடி சிலை வைக்கப்பட்டது. அந்த சிலைக்கு பாஜக தலைவர் பஜனேந்திர மிஸ்ரா தலைமையில் தினமும் பூஜை நடைபெற்றது. அதனையடுத்து மோடியும் பிரதமராக வெற்றி பெற்றார்.
சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து அங்கு லெனின் சிலை அகற்றப்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை உள்ளிட்ட சிலைகள் மர்ம நபர்களால் சேதபடுத்தப்பட்டது.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சிவன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் சிலை உடைக்கபட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.