ஒரு இளைஞர் தான் விவாகரத்து பெற்றதை கேக் வெட்டி வித்தியாசமாக கொண்டாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இளைஞருக்கு விவாகரத்து கிடைத்தவுடன், அவரது தாயார் பாலாபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
புத்தாடை அணிந்த அந்த வாலிபர், "Happy Divorce 120 gram gold 18 lakh cash" என்று எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி குடும்பத்துடன் கொண்டாடினார். விவாகரத்துக்காக தனது மனைவிக்கு 120 கிராம் தங்கமும் ரூ. 18 லட்சமும் கொடுத்ததை உணர்த்தும் வகையில் அவர் இந்தக் கேக்கை தயார் செய்திருந்தார்.
புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த அவர், "நான் இப்போது சிங்கிளாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். எனது வாழ்க்கை, எனது ஆட்சி" என்று குறிப்பிட்டு, விவாகரத்தை கொண்டாடுமாறு மற்றவர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். அவரது தாயார் பாலாபிஷேகம் செய்யும் வீடியோ 30 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த கொண்டாட்டத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த வாலிபரை 'அம்மா பையன்' என்று விமர்சித்துள்ளனர். மேலும், "இப்படிப்பட்டவர்களிடம் இருந்து பெண்கள் விலகி இருப்பது நல்லது" என்று சில பெண்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். சிலர் மட்டும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.