’எருமை மாடு’ என சக அமைச்சரை திட்டிய அமைச்சர்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

Siva

செவ்வாய், 7 அக்டோபர் 2025 (17:16 IST)
ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, அமைச்சர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட வார்த்தை போரில் ஒருவர் மற்றொருவரை எருமை மாடு என அழைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரு தேர்தல் நிகழ்வுக்கு தாமதமாக வந்த ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரான அட்லூரி இலட்சுமணனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான பொன்னம் பிரபாகர், நேரத்திற்கு மதிப்பளிக்கத் தெரியாத ஒரு எருமை மாடு என்று இழிவாகப் பேசியதாக கூறப்படுகிறது. 
 
இந்தக் குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர் இலட்சுமணன், தனது மன காயத்தை வெளிப்படுத்தி ஆறு நிமிட வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
"என்னை தனிப்பட்ட முறையில் அவர் திட்டலாம், ஆனால் எனது சாதியை குறிப்பிட்டு திட்டுவது சரியல்ல. நான் மாதிகா சமூகத்தை சேர்ந்தவன்; அதனால்தான் என்னை அமைச்சராக்கினார்கள். இனியும் அவர் இந்த வார்த்தைகளை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், அதன் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. இது குறித்து எனது சாதி பிரதிநிதிகள் மூலமாகவும், எனது அமைச்சர் தகுதியிலும் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு புகார் அனுப்பப்படும்," என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
 
இருப்பினும், அமைச்சர் பொன்னம் பிரபாகர், தான் எந்த இழிவான கருத்தையும் கூறவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். தனது வார்த்தைகள் திரித்து கூறப்பட்டதாகவும், உண்மையில், தான் விமான டிக்கெட்டுகளை உறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதத்தை பற்றியே பேசியதாகவும் அவர் விளக்கமளித்தார்.
 
இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்த நிலையில், தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகேஷ் குமார் கௌட் உடனடியாக தலையிட்டார். அவர் இரு அமைச்சர்களிடமும் தொலைபேசியில் பேசி, சமாதானம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்