குஜராத் மாநிலம் தேவ் பூமி துவாரகா மாவட்டத்தில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், தனது இரண்டு சிறு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் மேரமன் பாய் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். தற்போது அவரது நோய் கடைசி கட்டத்தை அடைந்திருந்தது. உடல்நிலை மோசமடைந்து வந்ததால், தனக்கு பிறகு தனது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அவர் தொடர்ந்து கவலைப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து, சேத்ரியா தனது ஐந்து வயது மகள் குஷி மற்றும் மூன்று வயது மகன் மாதவ் ஆகிய இருவருக்கும் விஷம் கொடுத்துள்ளார். அதன் பிறகு, அவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நடந்தபோது அவரது மனைவி வேலைக்கு சென்றிருந்தார்.